உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பிரச்னையை புரிய வச்சுட்டாங்க!

பிரச்னையை புரிய வச்சுட்டாங்க!

புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, அண்ணாமலையின் செயல்பாடு குறித்த நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், 'இப்ப என்னப்பா பிரச்னை உங்களுக்கு? பிரச்னை இல்லாமல் இருப்பதுதான் உங்களுக்கு பிரச்னையா? பா.ஜ.,வுல பிரச்னை இல்லாம இருக்கு. அதுல பிரச்னை உண்டாக்குவதுதான் உங்க பிரச்னை' என்றார்.உடனே, 'அண்ணாமலை இல்லாமல் பிரச்னை இல்லை; அண்ணாமலைதான் பிரச்னை என்கிறீர்களா...?'என, ஒரு நிருபர் கேட்க, 'அப்படி நான் சொல்லவில்லை. நீங்களா பிரச்னையை உண்டாக்காதீங்க... பா.ஜ.,வில் ஒரு பிரச்னையும் இல்ல ராஜா...' என, சிரித்தவாறே அங்கிருந்து நழுவினார்.மூத்த நிருபர் ஒருவர், 'அண்ணாமலை பெயரை சொல்லி கேள்வி கேட்டதுக்கு, விசு பாணியில் குழப்பமா பதில் தந்தாலும், அவரால்தான் தனக்கு பிரச்னைன்னு மறைமுகமா நமக்கு புரியவச்சுட்டாங்க...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
செப் 27, 2024 12:31

ராஜாவிடம் இருக்கற சீரியஸ்னஸ் கொஞ்சங்கூட இந்த பொம்பளைகிட்ட இல்லையே. சும்மா விளையாட்டுத்தனமா பேசிட்டு போகுது.


Sathyanarayanan Sathyasekaren
செப் 27, 2024 03:18

அண்ணாமலை இல்லாவிட்டால் தமிழக பிஜேபியை திராவிட கட்சிகளுக்கு அடிமையாக்கி இரண்டு மத்திய அமைச்சர் பதவிகளை பிடித்திருக்கலாம் என்று நினைத்திருப்பார்.


முக்கிய வீடியோ