வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லாம் நம் அமைச்சர் காட்டிய வழிதான் நாலணா எட்டணாக்கள் அன்றாட டீ, டிபனை சமாளிக்க உதவாதா ?
மதுரையில், போக்குவரத்து காவல் துறை சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில், அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர்கள் பங்கேற்றனர்.இதில், நடத்துனர் ஒருவர் பேசுகையில், 'நாலணா, எட்டணா சில்லரையே கொடுக்காம கண்டக்டர் எல்லாம்கோடீஸ்வரன் ஆகிட்டான்னு பேசுவாங்க... அதெல்லாம் கண்டுக்கவே கூடாது. நான் சிரிச்சுக்குவேன்;லந்தடிப்பேன். ஆனா, படியில நிக்க விடமாட்டேன்.'பஸ்ல போலீஸ்காரங்க சும்மா வர்றாங்க. நம்மளஹெல்மெட் போடச் சொல்றாங்க'ன்னு டிராபிக் போலீஸ்கிட்ட சண்டை போடாதீங்க... அவங்க நம்ம நண்பர்கள். அரசு பஸ்சில் வரும் பயணியரை நம்ம அம்மா, அப்பா, மகன், மாமன், மச்சான் என குடும்ப உறுப்பினர்களை போல பாதுகாக்கணும்...' என்றார்.இதைக் கேட்ட போலீஸ்காரர் ஒருவர், 'அட்டகாசமாபேசுறார்... ஆனால், நம்மள, 'ஓசி'ன்னு சொல்லிட்டாரே...'என, முணுமுணுத்தவாறு நடந்தார்.
எல்லாம் நம் அமைச்சர் காட்டிய வழிதான் நாலணா எட்டணாக்கள் அன்றாட டீ, டிபனை சமாளிக்க உதவாதா ?