உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  நோ மேயர்... நோ மேயர்!

 நோ மேயர்... நோ மேயர்!

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில், மதுரையில் தொழில் துறை வல்லுநர்களுக்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வர்த்தக துறை அமைச்சர் பீயூஷ் கோயல் பேசுகையில், 'நான் சிறுவனாக இருக்கும் போது இந்த கோவில் நகரான மதுரைக்கு வந்துள்ளேன். எப்பேர்ப்பட்ட மதுரை... ஆனால், இன்று குப்பைகள் சூழ்ந்துள்ளன. தொழில் துறையினர் நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை; ரவுடிகள் ராஜ்யத்தால் வியாபாரிகள், வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது' என்றார். பின், 'நீங்கள் நிம்மதியாக தொழில் செய்வதற்கு தி.மு.க., அரசு துணை நிற்கிறதா?' என்று கூட்டத்தினரிடம் கேட்டார். 'இல்லை... இல்லை...' என, கும்பலாக கூறினர். தொடர்ந்து பீயூஷ் கோயல் பேசுகையில், 'மதுரைக்கு மேயர் இருக்கிறாரா...' என்று கேட்டார். கூட்டத்தினர், 'மதுரைக்கு நோ மேயர்... நோ மேயர்' என்று சத்தமாக தெரிவித்தனர். கூட்டத்தில் இருந்த ஒருவர், 'மதுரையை பத்தி நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காரே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஏப் 22, 2026 14:28

மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் மேடையில் பேசும் முன் லோக்கல் issues குறைகளை கேட்டறிந்து கொண்டு அப்படியே வெளிப்படுத்தியிருப்பார். இன்று மறந்து போயிருக்கும்..


D.Ambujavalli
ஏப் 22, 2026 06:30

இவர் ஒவ்வொரு மாநகராட்சிக்கு சென்று பார்க்கட்டும், மேயர் என்பவர் லோக்கல் அமைச்ச்சருடன் சுற்றம்போது தவிர எங்கும் இல்லை என்று தெரிந்து கொள்வார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை