| ADDED : செப் 16, 2024 01:00 AM
கோவை மாநகராட்சி சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில், தி.மு.க., - எம்.பி., ராஜ்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மீனா பேசுகையில், 'கவுன்சிலராக, மண்டல தலைவராக இருக்கிறேன். பத்தாண்டுகள் ஆசிரியராகவும் இருந்துள்ளேன். இதில், ஆசிரியர் பணி தான் ரொம்ப கஷ்டம். நான் படித்தபோது, ஆசிரியர்களிடம் அடி வாங்காத நாளில்லை. தற்போது மாணவர்களை அடிப்பது மட்டுமல்ல; திட்டக்கூட முடிவதில்லை. ஆசிரியர்கள் வீட்டில் இருந்து புறப்படும் போதே போலீசாருடன் வர வேண்டும் போலிருக்கிறது. அந்தளவு மாணவர்களை பார்த்து பயப்பட வேண்டியுள்ளது' என்றார்.இதைக் கேட்ட ஆசிரியர் ஒருவர், 'இவங்களை மாதிரி ஒருத்தர் நம்ம துறைக்கு அமைச்சராகி இருந்தால், நம்ம கஷ்டம் புரிஞ்சு, கோரிக்கைகளை நிறைவேற்றி இருப்பாங்க... இப்ப இருக்கிற மகேஷுக்கு சர்ச்சையை சமாளிக்கவே நேரம் பத்தலை...' என, முணுமுணுத்தவாறு கிளம்பினார்.