உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பணம்னா ஆட்டைய போட்டுடுவாங்க!

பணம்னா ஆட்டைய போட்டுடுவாங்க!

தமிழக திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான,உண்டு உறைவிட பயிற்சி மற்றும் குடிமைப்பணிதேர்வுகளுக்கான படிப்பகம் திறப்பு நிகழ்ச்சி, சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நினைவு நுாலகத்தில் நடந்தது.இதில், தேசிய திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, 20,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை காசோலை மற்றும் பரிசுகளை துணை முதல்வர்உதயநிதி வழங்கினார். காசோலை கவரை வாங்கிய மாணவர்கள் இருக்கைக்கு சென்று, அதை பிரித்து பார்த்த போது, வெறும் கவர் மட்டுமே இருந்தது.நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கேட்டபோது, அவரும், 'என்ன... காசோலையை காணோமா...?' என, 'ஷாக்' ஆனார். பின், அதிகாரிகளிடம் பேசி விட்டு வந்தவர், 'காசோலை வரும்... போய் உட்காருங்க...' என்றார். பரிசு பெற்ற மாணவர் ஒருவர், 'காசோலையை நாம தானே மாத்த முடியும்... இதுவே பணம்னா, 'ஆட்டை'யை போட்டுடுவாங்க...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
அக் 01, 2024 23:10

திமுக கட்சிகாரன் கமிஷனை வாங்கிய பின் காசோலையை தருவான்.


Anantharaman Srinivasan
அக் 01, 2024 23:08

துணைமுதல்வரான பின் நடக்கும் முதல் நிகழ்ச்சியே ஏமாற்றம் தரும் வகையில்.


D.Ambujavalli
அக் 01, 2024 19:10

காசோலை வந்த பிறகும், வங்கியில் பணம் இருக்கா என்று பார்க்கவும் மற்றும், சொல்லப்பட்ட பணத்துக்கு , 10000 , லட்சம். என்றால் அந்தத் தொகைக்கு உள்ளதா என்று பார்க்கவும் 3. காசோலை வாங்க கையில் ஆளுக்கு 1000 cash கொண்டுவர கொள்வார்களா என்றும் பார்க்க வேண்டும் திராவிட மாடலில் எல்லாம் சாத்தியமே


Dharmavaan
அக் 01, 2024 09:11

ஏமாற்றி பிழைக்கும் திருட்டு திராவிடம் கட்டுமர குடும்பம்


புதிய வீடியோ