உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மறுபடியும் பேனர் வைப்பாங்க!

மறுபடியும் பேனர் வைப்பாங்க!

தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என்பது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு. ஆகையால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் வரும்போது, கொடிகள் மட்டுமே கட்டுவோம், பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் பழக்கம் கிடையாது. சில இடங்களில் மட்டும், அனுமதி பெற்று ஒன் றிரண்டு பேனர்கள் வைப்போம். 'தற்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு, அ.தி.மு.க.,வினர் அனுமதி பெறாமல், பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். அதை அகற்றப்போனால், அரசியல் என்று கூறுவர். எனவே, அனுமதி பெற்று வைக்காததற்கு, உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து, அபராத ம் விதிக்கும்...' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'அபராதத்தை கட்டிட்டு, அ.தி.மு.க.,வினர் மறுபடியும் பேனர்களை வைக்கத் தான் போறாங்க...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 29, 2025 17:10

ஏதாவது காது குத்துக்கு அமைச்சர், துணை முதல்வர் போனால் கூட இரண்டு மைலுக்கு பேனர் வைத்து, நடைபாதையை நாசமாக்குகிறார்களாம். இவர் கண்ணில் எதுவுமே படாதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை