வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பதநீரில் சக்கரை போடீங்களா என்றும் பூனை மேல் மதில் என்றும் கேட்டவருக்கு எப்படி விவசாயத்தை பத்தி தெரியும்...
இவர்கள் நாஜிக்களின் வழக்குகளை அவசரமாக முடித்து 'உள்ளே' தள்ளாமல் இருப்பதை, இப்படி நினைவூட்டி இருக்க வேண்டாம்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்ற பிரசார கூட்டம் நடந்தது. இதில் பழனிசாமி பேசுகையில், 'விவசாயம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? அவரும் வரட்டும்; நானும் வருகிறேன். விவசாய பயிர்களை எல்லாம், ஒரு இடத்தில் வைக்கலாம். அவை என்ன பயிர்கள் என, அவர் சொல்லட்டும் பார்க்கலாம்; அவருக்கு எதுவும் தெரியாது. 'தமிழக நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனங்களில், 800 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. தேர்தல் நேரத்தில், ஏராளமான அமைச்சர்கள் சிறைக்கு சென்று விடுவர்; நாமெல்லாம் சுதந்திரமாக சென்று ஓட்டு கேட்கலாம்...' என்றார். இதை கேட்ட அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'அமைச்சர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போயிடுவாங்கன்னு, இவருக்கு டில்லியில் இருந்து நம்பகமான தகவல் வந்திருக்கும் போல...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.