வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எம். பி சீட்டுக்கு பேரம் பேசி வாங்குவதில் பத்து எட்டு எண்ணிக்கை குறைந்தால் எவ்வளவு நஷ்டம் என்பது அவர்களுக்குத்தானே theriyum
இந்திய கம்யூ., கட்சியின், 25வது மாவட்ட மாநாடு சேலத்தில் நடந்தது. இதில், அக்கட்சியின் மாநில செயலர் முத்தரசன் பங்கேற்றார்.மாநாட்டில் முத்தரசன் பேசுகையில், 'அரசியல் ரீதியாக தமிழக அரசுக்கு நெருக்கடி தரப்படுகிறது. தமிழகத்துக்கு தேவையான கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். தற்போது மொத்தம், 543 எம்.பி.,க்கள் உள்ளனர். புது லோக்சபா கட்டடத்தில், 848 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம்... ஏற்கனவே முடிவெடுத்து, அதன்படி நடக்கின்றனர் என்பது தெரிகிறது. எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைந்தால் தமிழகம் பாதிக்கும்...' என்றார்.இதை கேட்ட பொதுஜனம் ஒருவர், 'தமிழகத்திற்குஇப்ப 39 எம்.பி.,க்கள் இருந்தும், எந்த வேலையும்உருப்படியா நடக்கலையே... எம்.பி.,க்கள் குறைஞ்சா மக்களின் வரிப்பணமாவது வீணாகுவது குறையும்...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள், தலையை ஆட்டி ஆமோதித்தபடியே கலைந்தனர்.
எம். பி சீட்டுக்கு பேரம் பேசி வாங்குவதில் பத்து எட்டு எண்ணிக்கை குறைந்தால் எவ்வளவு நஷ்டம் என்பது அவர்களுக்குத்தானே theriyum