உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  இதுக்காக ஓட்டு போட்டுடுவோமா?

 இதுக்காக ஓட்டு போட்டுடுவோமா?

வேலுார் மாவட்டம், காட்பாடியில், அரசு சட்டக் கல்லுாரி மற்றும் சேர்க்காடு அரசு கலைக் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, இலவச லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இதில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 'மாணவர்களுக்கு லேப்டாப் அவசியம். லேப்டாப் இருந்தால் வெனிசுலா, அரேபியா என பல வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ளலாம்; இல்லை என்றால் நாம் பின்தங்கி விடுவோம். இனி, லேப்டாப் தான் உலகம். அதனால் தான், 'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டம் மூலம் லேப்டாப் வழங்கப்படுகிறது' என்றார். இதை கேட்ட மாணவர் ஒருவர், 'கடந்த ஆட்சியில் பிளஸ் 2 படிக்கிறப்பவே லேப்டாப் குடுத்தாங்க... இவங்க ஆட்சிக்கு வந்து, நாலு வருஷமா குடுக்காம, இப்ப தேர்தலுக்காக தந்துட்டு, வெட்டி நியாயம் வேற பேசுறாங்களே...' என முணுமுணுக்க, சக மாணவர், 'இதுக்காக எல்லாம், நாம இவங்களுக்கு ஓட்டு போட்டுடுவோமா என்ன...' என்றபடியே கிளம்பி னார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
ஜன 18, 2026 21:15

திமுக ஆட்சியின் அவலட்சணங்கள் கைபுண் போல் தெரிந்தாலும் இலவசங்களுக்கும்/ஓட்டுக்கு தரப்பபடும் பணத்துக்கும் ஆசைப்பட்டு ஓட்டளிக்க கூடியவர்கள் இருக்கவே செய்கின்றனர். அந்த தைரியத்தில் தான் 200 சீட்கள் வெல்வோம் என மேடை தோறும் முழங்குகின்றனர்.


panneer selvam
ஜன 18, 2026 11:12

It is totally waste since final year college students will complete the course in couple of months . Free laptops should be given to 10th class school students so that next 5 years , they could use it in their final school years and college days . It is nothing but utter stupidity of Stalin government


D.Ambujavalli
ஜன 18, 2026 06:16

இந்தக் கால மாணவர்கள் விவரமாகத்தான் இருக்கிறார்கள்


சமீபத்திய செய்தி