உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பழைய பல்லவியை பாடுவாங்க!

பழைய பல்லவியை பாடுவாங்க!

துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள், அதிகமாக கேள்விகள் கேட்டபடியே இருந்தனர்.அதிகாரிகள் பொறுமையாக பதில் அளித்தாலும், கூடுதல் தகவல்களை கேட்டு விவசாயிகள் விவாதம் செய்தனர். இதனால், 'டென்ஷன்' ஆன கலெக்டர், 'இது, சட்டசபை அல்ல, நான் சபாநாயகரோ, நீங்கள், எம்.எல்.ஏ.,க்களோ இல்லை. விவசாயத்திற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தால், எப்போது கூட்டத்தை முடிப்பது?' என, சற்று கோபத்துடன் கேட்டார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் ஒருவர், 'இந்த கலெக்டர் வந்த பின்தான், நம்ம கேள்விகளுக்கு அதிகாரிகள் சரியான பதிலை கொடுக்கின்றனர். அதை கெடுக்கும் வகையில், நம்மாட்களே செயல்பட்டால், 'பார்க்கலாம், நடவடிக்கை எடுக்கிறோம்'னு அதிகாரி கள், பழைய பல்லவியை பாடி, கூட்டத்தை முடிச்சிடுவாங்க...' எனக்கூற, சக விவசாயிகள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மார் 24, 2025 06:26

கேட்க வேண்டிய, சம்பந்தமுள்ள கேள்விகளை முன்கூட்டியே discuss செய்து கேட்பது, சரியான பதில் கொடுக்காத அதிகாரிகள், ஊழியர்கள் தரவுகளுடன் பதிலளித்து விட்டால் போச்சு. அதைவிட்டு கேள்வி கேட்டாலே நீங்கள் எம்.எல்.ஏக்களா என்றால் சட்டசபை மட்டும்தான் கேள்வி கேட்குமிடமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை