உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அந்தக்காலம் மலையேறிடுச்சு பா!

அந்தக்காலம் மலையேறிடுச்சு பா!

கடலுார் மாவட்டம், நெய்வேலியில் நடந்த பொதுக் கூட்டத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார். அவர் பேசுகையில், 'தமிழகத்தில், ம.தி.மு.க., என்ற கட்சியே இல்லை என சிலர் பேசுகின்றனர். 30 ஆண்டுகள் தி.மு.க.,விலும், 31 ஆண்டுகள் ம.தி.மு.க., விலும் என, 61 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் பயணித்துள்ளேன். 'மத்திய அமைச்சராக வாய்ப்புகள் வந்தபோதும் ஏற்கவில்லை. அப்படிப்பட்ட என்னை சுயநலவாதி என்றும், பா.ஜ., கூட்டணியில் இணைய போவதாகவும் கூறுகின்றனர். 2026 சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., ஆதரவு இல்லாமலே, தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இருந்தாலும், ம.தி.மு.க., தொடர்ந்து தி.மு.க.,வுக்கே ஆதரவளிக்கும்...' என்றார். இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'நாங்க இல்லாம, தி.மு.க., ஆட்சி இல்லன்னு சொல்லாம, ரொம்பவே அடக்கி வாசிக்கிறாரே...' என முணுமுணுக்க, மற்றொரு தொண்டர், 'அந்தக் காலமெல்லாம் மலையேறிடுச்சு பா...' என, பெருமூச்சு விட்டபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
ஆக 31, 2025 17:14

ஒரு சில sweet box கிடைத்தால் போதும் ஏறெடுப்பவர், கர்ஜிப்பதாவது ஒரு சிங்கம் பூனையாகி வெகு காலம் ஆகிவிட்டது


ponssasi
ஆக 31, 2025 15:30

61 ஆண்டு பொது வாழ்க்கைல நீங்க சுமார் 51 ஆண்டுகள் தீமுகாவில் தான் இருந்தீர்கள் 10 ஆண்டுகள் மட்டுமே மதிமுக கட்சியை வழிநடத்தினீர்கள்.


lasica
ஆக 31, 2025 08:31

மானம், ரோஷம், சூடு, சொரணை, குறைந்த பட்ச அறிவு, மனசாட்சி இல்லாத கீழ்த்தரமானவர்கள்


karupanasamy
ஆக 31, 2025 08:02

தேவை இல்லாத வெட்டி லக்கேஜு வெட்கம் மானம் சூடு சொரணை நோ ப்ராப்லம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை