உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கலெக்டர் பாராட்டுக்குரியவர்!

கலெக்டர் பாராட்டுக்குரியவர்!

கோவையின் பெருமை குறித்த பாடல் ஆடியோ வெளியீட்டு விழா, கோவை புரோசோன் மாலில் நடந்தது.இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர்சத்யராஜ் பேசுகையில், 'நான் 30 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கிறேன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் பல ஆண்டுகளாக நடிக்கிறேன். பல தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும்எனக்கு இப்பவும் தெலுங்கு பேச வராது.'அந்த மொழியை சரளமாக கற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால், தெலுங்கானாவில் பிறந்து, கோவையில் கலெக்டராக பணியாற்றும் கிராந்திகுமார்,அவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார். அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்' என்றார். இதற்கு பலமான கைதட்டல் எழ, கலெக்டரும் மேடைக்கு நெகிழ்ச்சியுடன் வணக்கம் வைத்தார்.மூத்த நிருபர் ஒருவர், 'தமிழக இளைஞர்களே இப்பல்லாம் தமிழ் பேச தடுமாறும்போது, கோவை கலெக்டர் பாராட்டுக்குரியவர் தான்...' என்றபடியே நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 01, 2024 18:57

பீஹாரியான கவர்னர் பிழையின்றித் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவார். மற்ற மாநிலத்தவர்கள் தான் இனி தமிழை வளர்க்க வேண்டும்


புதிய வீடியோ