உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  முதல்வரை புகழ மாட்டேங்கிறாரே!

 முதல்வரை புகழ மாட்டேங்கிறாரே!

திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் நவீன கதிரியக்க சிகிச்சை மையம் திறப்பு விழா, சமீபத்தில் நடந்தது. இதில், திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசுகையில், 'இந்த இடத்தில், அந்த காலத்தில் மருத்துவமனை அமைய, அப்போது எம்.எல்.ஏ.,வாக இருந்த துரைசாமி தான் காரணம். கருணாநிதி ஆட்சியில் எம்.எல்.ஏ.,வாக அவர் இருந்தபோது, பல எதிர்ப்புகளை தாண்டி, இங்கு மருத்துவமனை வர காரணமாக இருந்தார். 'அதோடு, திருப்பூரில் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, சிக்கண்ணா ஆண்கள் அரசு கல்லுாரி அமையவும் அவர்தான் காரணமாக இருந்தார்' என, புகழ்ந்து தள்ளினார். இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'இந்த மருத்துவமனையை நவீனமா கட்டியுள்ள நம்ம முதல்வரை புகழாமல், 'மாஜி' எம்.எல்.ஏ., புகழ் பாடிட்டு இருக்காரே...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
மார் 14, 2026 20:03

மருத்துவமனை வர அஸ்திவாரம் போட்டவரை பாரட்டுகிறார். இன்று ஜிகினாவேலை செய்து விளம்பரம் தேடிக்கொள்பவரை கட்சிகார MLA கே பிடிக்கவில்லையென ரிகிறது.


D.Ambujavalli
மார் 14, 2026 06:32

இன்று காய்த்துப், பழுத்து நிற்கும் மரம், அன்று போட்ட விதையால்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார் கட்சி மேலிடம் கட்டம் கட்டிவிடுமோ என்ற அச்சமில்லாதவர் போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை