உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ‘ஹீரோவா தான் பார்க்கிறோம்!’

‘ஹீரோவா தான் பார்க்கிறோம்!’

பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது. த.வெ.க.,வைச் சேர்ந்த, பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி பங்கேற்றார். பின், அவர் அளித்த பேட்டியில், ‘எல் – நினோ பாதிப்பால் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, மத்திய அரசு சார்பில் தீவனத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது; பெரும்பாலான மாவட்டங்களில் வழங்கி விட்டோம்; மீதமுள்ள மாவட்டங்களுக்கு உடனடியாக வழங்கப்படும்’ என்றார். தொடர்ந்து, மூத்த நிருபர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு, விஜயலட்சுமி பதிலளித்தார். பிரபல, ‘டிவி’ நிருபர் ஒருவர் சத்தமாக கேள்வி கேட்க, நன்றி தெரிவித்து பேட்டியை முடித்துக் கொண்டார். உடனே அந்த நிருபர், ‘எங்களை வில்லனாகவே பார்க்கிறீங்களே’ என சிரித்தபடியே கேட்க, அதற்கு அமைச்சர் விஜயலட்சுமி, ‘இல்ல இல்ல... உங்கள ஹீரோவா தான் பார்க்கிறோம்’ என கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 22, 2026 08:04

மாட்டுத் தீவனத்துக்கு மானியம் ..... காரணம் எல் நினோ ..... எல் நினோ பாதிப்பு நீங்கிய பிறகு மானியத்தை நிறுத்தும் துணிவு மத்திய அரசுக்கு இருக்கிறதா >>