| ADDED : ஜன 07, 2025 10:32 PM
சென்னை சைதாப்பேட்டையில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் சார்பில் அமைக்கப்பட்ட மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.இதில் பேசிய முதல்வர், 'பெண்கள் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்; அதிகாரத்தில் அமர வேண்டும்; உலக அறிவை பெற வேண்டும் என, பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு காரணம், பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமுதாயம் நிமிர்ந்து நிற்க முடியும். பெண் அடிமை தீர்ந்து, பெண் அதிகாரம் பெறும் மாற்றத்தை நோக்கி தமிழகம் மிக வேகமாக முன்னேறி வருகிறது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'மகனை துணை முதல்வராக்கியதற்கு பதிலா, தங்கை கனிமொழியை அந்த பதவியில் அமர வைத்துவிட்டு முதல்வர் இப்படி பேசினால் சல்யூட் அடிக்கலாம்...' என முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'அவங்க உபதேசம் எல்லாம் எப்பவும் ஊருக்கு மட்டும் தானே...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தபடி நடந்தார்.