உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  ஆட்சி ஆட்டம் கண்டு விடும்!

 ஆட்சி ஆட்டம் கண்டு விடும்!

தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஊதிய உயர்வு கேட்டு, கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில், சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஆக்ரோஷமாக பேசிய தொழிற்சங்க நிர்வாகி ஒருவர், 'மின்சாரம் போல, 24 மணி நேரமும் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். குடும்பத்தை கூட சரியாக கவனிக்க முடியவில்லை. செயற்பொறியாளர்கள் பலர், மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 'விரைவில் ஊதிய உயர்வு கொடுக்கவில்லை என்றால், 2011ல் தி.மு.க., ஆட்சி மின்வெட்டு பிரச்னையால் பறிபோனதை மறக்க வேண்டாம். வரும் தேர்தலிலும் அதே நிலை உங்களுக்கு வந்து விடக்கூடாது என, எச்சரிக்கை செய்கிறோம்' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இவங்க கரன்டை கட் பண்ணி போராட்டம் நடத்தினா, ஆட்சி ஆட்டம் கண்டுவிடுமே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மார் 08, 2026 06:41

இவர்கள் கையில் உள்ள மின்வெட்டு ஆயுதத்தை நாலு தேர்தல் கூட்டங்களில், பிரயோகித்து, மக்கள் அவதிப்பட்டு கலந்து போனாலே போதுமே, இதைக் கூறினால் தானாக அரசு வழிக்கு வந்துவிடாதா/


புதிய வீடியோ