வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாலை , டாஸ்மாக் சரக்குதான் சாப்பிடலாமா? அரசுக்கு அள்ளித்தரும் காமதேனுவுடன், எந்தத் துறையும் போட்டியிட முடியாது
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இதில், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பேசுகையில், 'பால் கொள்முதல் விலையை, லிட்டருக்கு, 50 ரூபாயாக உயர்த்த வேண்டும். தீவனம் விலை, மாதா மாதம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. டாஸ்மாக்கில், ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாயை தமிழக அரசு சம்பாதிக்குது. 1 லிட்டர் பாலுக்கு, 50 ரூபாய் கொடுக்க என்ன தயக்கம்னு தெரியலை. பால் சொசைட்டி பிரச்னையை கவனிக்கலைன்னா, ஆவின் காணாம போய் விடும்' என்றார்.உடனே எழுந்த ஆவின் அலுவலர், 'சார்... அது அரசின் கொள்கை முடிவு; நாங்க ஒண்ணும் பண்ண முடியாது' என்றார்.பெண் விவசாயி ஒருவர், 'டாஸ்மாக் உதாரணத்தை சொன்னதும், எவ்வளவு வேகமா பதில் வருது பாருங்க. நிஜமாவே அதுல வருமானம் கொறஞ்சா, அரசே திவால் ஆகிடும் போல...' எனக் கூற, அருகில் இருந்த விவசாயிகள் ஆமோதித்து சிரித்தனர்.
பாலை , டாஸ்மாக் சரக்குதான் சாப்பிடலாமா? அரசுக்கு அள்ளித்தரும் காமதேனுவுடன், எந்தத் துறையும் போட்டியிட முடியாது