உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கழகம் என்றாலே கலகம் தான்!

கழகம் என்றாலே கலகம் தான்!

தமிழக எம்.பி.,க்களை அவமானப்படுத்தி விட்டதாக புகார் கூறி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, சேலம் மாவட்டம், ஆத்துார், பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில், தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலர் சிவலிங்கம் தலைமை வகித்தார்.இதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில்,தி.மு.க., என்பதற்கு பதிலாக, 'தி.மு.க., கழகம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்த கட்சியின் மூத்த நிர்வாகிகள், 'தமிழ் மொழிக்காக குரல் கொடுக்கும் நம்ம கட்சியில், கட்சி பெயரை கூட, தற்போதுள்ள உடன் பிறப்புகள் சரியாக குறிப்பிடுவதில்லையே' என, தங்களுக்குள் புலம்பினர்.அவ்வழியே சென்ற பா.ஜ., தொண்டர் ஒருவர், 'அதுசரி... கழகம் என்றாலே, கலகம் தான்னு சிம்பாலிக்கா சொல்றாங்க போலும்...' என, 'கமென்ட்' அடிக்க, அவருடன் வந்தவர்கள் சிரித்தபடியே நடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
மார் 16, 2025 15:03

ஒரு பக்கம் இந்த திருட்டு கும்பலுக்கு ஓட்டுப்போடும் தமிழக மக்கள் அவர்கள் செயலுக்கான தண்டனையை அவர்களே காலப்போக்கில் தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடலாம் என்று நினைத்தாலும், இன்னோரும் பக்கம், திருட்டு கும்பல் அடிக்கும் கொள்ளைகளை அதன் அளவுகளை பார்க்கும்போது, இப்படியே மீண்டும் ஒரு ஐந்து வருஷங்களுக்கு ஆள விட்டால் இந்த கும்பல் எஸ்கொபார் ஒசாமா பின் லாடன் அளவுக்கு வளர்ந்து நிச்சயமாக இந்திய நாட்டின் இறையாண்மைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகிவிடும் என்பதை நினைக்கும்போது, அந்த விஷ கும்பலை உடனே அறுத்து எறியவேண்டிய அவசியம் மிக முக்கியமாகிறது.


Sathyan
மார் 16, 2025 04:11

Cheap திமுக , இந்த கட்சிக்கு ஓட்டுப்போடும் அறிவுக்குன்றிய தமிழக மக்கள். இந்த நாடும் நாட்டு மக்களும் அழிந்து போகட்டும் என்று நடிகர் வீரப்பன் அன்று சொன்ன வார்த்தை தமிழ்நாட்டுக்கு தற்போது மிக்க பொருத்தமாக இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை