உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கட்சியிலும் மதிப்பில்லையே!

கட்சியிலும் மதிப்பில்லையே!

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், உத்திரமேரூர் மத்திய ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் மணல்மேட்டில் நடந்தது. மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். சோமசுந்தரம் பேச தொடங்கியபோது, கூட்டத்தில் பங்கேற்ற மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஒவ்வொரு பெயரையும் கூறினார். ஆனால், அங்கிருந்த பெண் நிர்வாகிகளின் பெயர்களை சொல்லாமல் விட்டு விட்டார். கூட்டம் முடிந்ததும், ஒரு பெண் நிர்வாகி, 'நம்ம யார் பெயரையும் மாவட்டச் செயலர் அண்ணன் சொல்லாம விட்டுட்டாரே... வீட்டுல இருக்கிற ஆண்கள் தான் நம்மை மதிக்க மாட்டேங்கிறாங்கன்னா, கட்சியிலும் கூட மதிக்க மாட்டேங்கிறாங்களே...' என புலம்ப, சக பெண் நிர்வாகிகள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை