உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவங்க தான் காமெடி பீசாவாங்க!

இவங்க தான் காமெடி பீசாவாங்க!

சென்னை கொளத்துார் அருகே புத்தகரத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் தெருமுனை கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சி நிர்வாகி, 'சாட்டை' துரைமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். துரைமுருகன் பேசுகையில், 'நடிகர் அஜித் செய்ற உதவி யாருக்கும் தெரியாது. வெள்ள பாதிப்பின்போது தன் வீட்டை மக்களுக்கு கொடுத்தார். சூர்யா, கார்த்தி, சத்யராஜ் போன்றோர் எல்லாம் ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு உதவி வருகின்றனர். 'இப்ப ஒரு நடிகர், கட்சியை ஆரம்பிச்ச உடனே, அடுத்த முதல்வர் நான் தான் என பேசுகிறார். சினிமாவில் இவர் என்ன செய்தார்? இவரது படம் வெளிவர ஜெயலலிதா வீட்டு வாசலில் போய் காத்து கிடந்தது தான் மிச்சம். எங்களுக்கு போட்டியே தி.மு.க., தான். அணில்கள் எல்லாம் எங்களுக்கு ஒன்றுமில்லை. நமக்கு காமெடி பீஸ் ஆக இருக்க போகின்றனர்...' என்றார். பார்வையாளர் ஒருவர், '234 தொகுதியிலும் தனித்து நிற்கும் இவங்க தான், காமெடி பீசாக போறாங்க...' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை