உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நம்மை போட்டு தாக்கிட்டாரே!

நம்மை போட்டு தாக்கிட்டாரே!

கோவையில் நடந்த, பீம்ராவ் இலவச சட்ட உதவி மையத்தை, ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் திறந்து வைத்தார்.இதில் பங்கேற்ற, அண்ணா பல்கலையின் முன்னாள்துணைவேந்தர் பாலகுருசாமி பேசுகையில், 'ஏழைகள்,தங்கள் உரிமைக்காக கோர்ட்டில் வழக்கு தொடுத்து, வக்கீல்களுக்கு செலவழிப்பது மிக கஷ்டம். இப்போதெல்லாம் வக்கீல்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கு.'அரசுக்கு எதிராக ஐகோர்ட்டில் நான் ஒரு வழக்கு தொடுத்தேன். இதற்கு வக்கீலுக்கு, 5 லட்சம் ரூபாய் 'பீஸ்' கொடுத்தேன். ஏழைகளால் கொடுக்க முடியுமா...எனவே, இதுபோன்ற சட்ட உதவி மையம் துவங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்' என்றார்.இதைக் கேட்ட வக்கீல் ஒருவர், 'பாலகுருசாமி மனதில்பட்டதை தயக்கமின்றி பேசக்கூடியவர்னு அறிமுக உரையில் சொன்னாங்க... மனதில் பட்டதை பேசுறேன்னு, நம்மை போட்டுத் தாக்கிட்டாரே' என, புலம்பியபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

panneer selvam
அக் 11, 2024 18:15

Not only lawyers fee but time taken to get a judgement discourages a common man to approach Indian Court . So it is better to approach local don and get it settled . Our judiciary speed is just less than snails speed . Look at actor Goundamani civil case on his property in Chennai . It took just 20 years to get final judgement of course Goundamani ji might have engaged the best of best lawyers at great expense to fight his case


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை