உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நல்லா மெயின்டெயின் பண்றாங்க!

நல்லா மெயின்டெயின் பண்றாங்க!

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் ஆகியோர் ஒரே விமானத்தில் கோவை வந்தனர்.விமான நிலையத்தில் இருந்து முதலில் வெளியில் வந்த பழனிசாமி, பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, முருகன் வெளியே வந்தார். அப்போது பா.ஜ., தொண்டர்கள், 'பாரத் மாதா கி ஜே' என, கோஷமிட்டனர். இதையடுத்து, பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த பழனிசாமி, சில நிமிடங்கள் பேச்சை நிறுத்தினார்.இதை பார்த்த முருகன், தொண்டர்களை, 'கோஷமிட வேண்டாம்' எனக் கூறினார். கோஷம் நின்றதும், மீண்டும் பேட்டி அளிக்க துவங்கினார் பழனிசாமி.இதை பார்த்த சீனியர் நிருபர் ஒருவர், 'பரவாயில்லைப்பா... கூட்டணியை நல்லாவே, 'மெயின்டெயின்' பண்றாங்க...' எனக் கூற, சக நிருபர்கள் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ