உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  குடும்ப ஓட்டுகளை பிரிச்சிட்டாங்க!

 குடும்ப ஓட்டுகளை பிரிச்சிட்டாங்க!

மதுரை மாநகர அ.தி.மு.க., சார்பில், சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் தொடர்பான ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது. மாநகர அ.தி.மு.க., செயலரும், எம்.எல்.ஏ.,வுமான செல்லுார் ராஜு பேசுகையில், 'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும், எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும், தி.மு.க., - அ.தி.மு.க., இடையேதான் போட்டி. 'விடுபட்டவர்களை மீண்டும் நாம் வாக்காளர்களாக சேர்க்க வேண்டும். இதை சரியாக செய்தாலே, மதுரை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில் யாரை நிறுத்தினாலும், அ.தி.மு.க, நுாற்றுக்கு நுாறு சதவீதம் வெற்றி பெறும். சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியலில், எங்க குடும்ப ஓட்டுகளையே பிரிச்சிட்டாங்கப்பா. அதனால் தான், கலெக்டரிடம், குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் தான் நல்லது என சொன்னேன்' என்றார். இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'வாக்காளர் பட்டியல் திருத்த பணியை நம்ம கட்சி ஆதரிச்சும், அண்ணனுக்கே இந்த நிலையா...?' என, முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜன 08, 2026 06:32

யார் கண்டது? குடும்பம் என்று எத்தனை பேரை சேர்த்திருந்தாரோ? மேல்நாடு, வெளியூர் சென்ற எத்தனை பேரை இன்னும் வைத்திருந்தாரோ? நீக்கியதை மட்டும் தம்பட்டமடிப்பவர், காரணத்தை சொல்லிவிடுவாரா?


புதிய வீடியோ