உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இது புதுசு இல்லையே!

இது புதுசு இல்லையே!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான, தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்றார்.இதில் அவர் பேசுகையில், 'தி.மு.க., வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், மூன்று பேர், 'சீட்' கேட்டிருந்தனர். நான்கு பேரும் சரிசமமாக கட்சிக்கு பாடுபட்டவர்கள்; மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள். எனவே, முதல்வர் ஒருவருக்கு சீட் கொடுத்ததுடன், இந்த தேர்தல் பணிமனையை, மற்ற மூவரும் முழுமையாக கவனித்து நடத்த வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துள்ளார்' என்றார்.இதைக் கேட்ட இளம் நிருபர் ஒருவர், 'எம்.எல்.ஏ., சீட்டும், எலக் ஷன் வேலையை பொறுப்பா பார்ப்பதும் ஒன்றா...!' என முணுமுணுக்க, மூத்த நிருபர் ஒருவர், 'ஒருத்தருக்கு சீட்டும், மற்றவர்களுக்கு இதயத்தில் இடமும் கொடுப்பது, கருணாநிதி காலத்தில் இருந்து நடப்பது தானே... இது ஒண்ணும் புதுசு இல்லையே...' என, 'கமென்ட்' அடித்தபடி நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை