உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  வேலை கொடுக்கிறவங்களா மாறணும்!

 வேலை கொடுக்கிறவங்களா மாறணும்!

அரசு பொதுத் தேர்வுகளான, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சிறப்பிடம் பிடித்த, திருப்பூர் மாநகராட்சி பகுதி மாணவ - மாணவியருக்கு, சமீபத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், மொத்தம், 3.93 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விழாவில், சங்கத்தின் கவுரவத் தலைவர் சக்திவேல் பேசுகையில், 'திருப்பூர் மாணவ - மாணவியர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். பொதுவாக படித்தவர்கள், கலெக்டர், டாக்டர், வக்கீல் ஆகலாம். ஆனால், திருப்பூரைச் சேர்ந்தவர்கள் ஏற்றுமதியாளர்கள் ஆகலாம். 'திருப்பூரில் இருந்து ஆண்டுதோறும், 45,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறோம். நீங்களும், வருங்காலத்தில் ஏற்றுமதியாளராக வரலாம்; அதற்கு தேவையான உதவிகளை எங்கள் சங்கம் செய்து கொடுக்கும்' என்றார். இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'படிச்சு முடிச்சு வேலைக்குப் போறதை விட, பலருக்கு வேலை கொடுக்கிறவங்களா நம்ம மாணவர்கள் மாறணும்' எனக் கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 22, 2026 19:14

பல. நாடுகளில். அறிமுகமாகும். தொழில். நுட்பங்களை. அறிய. மேல்படிப்பும். அவசியம்தானே டாக்டர், எஞ்சினீர் மட்டும்தான். மேல்படிப்பு. படிக்க. வேண்டுமா? எஞ்சினீரிங்கிலேயே Textiles துறையில். நுண்ணறிவுக்கு. வாய்ப்பு. உள்ளது அதனால் பொருளின் தரத்தையும். மேம்படுத்தினால். ஏற்றுமதி. மேலும். விரிவடைவதுடன். உலகளாவிய. அங்கீகாரம். கிடைக்குமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை