உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஒரே கல்லில் ரெண்டு மாங்கா!

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா!

கோவை, சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் போதிய பஸ்கள் இல்லாமல், வெளியூர் பயணியர் கூட்டம்அலைமோதியது. அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், அவசர கதியில் சில பஸ்களை ஏற்பாடுசெய்தனர். ஆனாலும், கூட்டத்திற்கு ஏற்ப பஸ்கள் போதுமான அளவில் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த பயணியர் மறியலில் ஈடுபட்டனர்.போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போலீஸ் உதவியைநாடினர். போலீசார் ஒரு பக்கம் சமாதான பேச்சில்இறங்க, சிறிது நேரத்தில் ஆம்னி பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வரிசை கட்டின. ஆம்னி பஸ் ஊழியர்கள் கூவி கூவி அழைக்கவே, போராட்டத்தில்ஈடுபட்ட பயணியர் ஆம்னி பஸ்களில் ஏறி பயணிக்க,சில நிமிடங்களில் பஸ் ஸ்டாண்ட் காலியானது.ஆனால், ஆம்னி பஸ்களை ஏற்பாடு செய்ததே அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் என்பது, அதன்பின்னரே தெரிய வந்தது. இதில், அதிகாரிகளுக்கு கமிஷனும் கிடைத்ததாம்.இதை கேள்விப்பட்ட போலீசார், 'நம்மை சமாதானம்பேச அனுப்பிட்டு, போக்குவரத்து அதிகாரிகள் ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிச்சுட்டாங்களே...' என, முணுமுணுத்தவாறு கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
டிச 14, 2024 05:58

போலீஸ்காரர்களை முட்டாளாக்கி, மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் அதிகாரிகள், அமைச்சரின் ஆசீர்வாதம் இல்லாமலா இப்படிச் செய்திருப்பார்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை