உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / யாரு செலவு செய்யுறது?

யாரு செலவு செய்யுறது?

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, தேனியில் இந்திய கம்யூ., சார்பில், பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. கட்சியினர் நகலை எரிக்கத் துவங்கியதும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூ., கட்சியினர், 25 பேரை கைது செய்து பஸ்சில் ஏற்றினர். அதன்பின், திடீரென அவர்களை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு, 'வீட்டுக்கு போங்க' என, போலீசார் கூறினர். கம்யூனிஸ்ட் கட்சியினரும், போலீசாருக்கு ஒரு கும்பிடு போட்டு, வீட்டிற்கு நடையை கட்டினர்.நிருபர் ஒருவர், 'திருமண மண்டபத்துல அடைச்சு சாயந்தரம் தானே விடுவிப்பீங்க... ஏன் உடனே விட்டுட்டீங்க' என, போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்க, அவரோ, 'இவங்களை அடைச்சு வச்சா, மதியம் சாப்பாடு, சாயந்தரம் டீ, காபி எல்லாம் வாங்கி கொடுக்கணும்... அந்த செலவை எல்லாம் யாரு செய்யுறது... அதான் விட்டுட் டோம்...' எனக் கூற, நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 11, 2025 06:28

அடப்பாவமே, ஒரு நாள் மூன்று வேளை ‘கல்யாணச் சாப்பாடு கூடப் போடாம வீட்டுக்கு திரத்திவிட்ட இந்தப் ‘போராட்டத்துக்கா இந்தப் பாடுபட்டு கூட்டம் சேர்த்தோம் என்று நொந்து போயிருப்பார்கள்


சமீபத்திய செய்தி