உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ‘தனுஷ் ரசிகர்கள் ஏமாந்துடுவாங்களோ?’

‘தனுஷ் ரசிகர்கள் ஏமாந்துடுவாங்களோ?’

த.வெ.க.,வைச் சேர்ந்த தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், சென்னையில் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரட்டும் நல்லது. ஆனால், விஜய்க்கு யாரும் போட்டி கிடையாது. 50 ஆண்டுகள் ஆண்ட திராவிட கட்சிகளுக்கு, மக்கள் நல்ல பாடம் கற்று கொடுத்துள்ளனர். தி.மு.க., – அ.தி.மு.க.,வே எங்களுக்கு போட்டி கிடையாது. ‘அப்படியிருக்கையில், புதிதாக வருபவர் எப்படி போட்டியாக முடியும்? தனுஷ் ஒரு முடிவெடுத்துள்ளார். அது சரியா, தவறா என்பது குறித்து, வரும் காலங்களில் தான் தெரியும். 2026 சட்டசபை தேர்தலில், மக்கள் தெளிவான பதில் கொடுத்துள்ளனர். இப்போது மீண்டும் ஒரு நட்சத்திரம் வருகிறார்; திருப்புமுனையாக இருக்கும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால், அது ஏமாற்றமாகத் தான் இருக்கும்’ என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவரது ரசிகர்கள் ஏமாந்து போயிடுவாங்கன்னு சொல்ல வர்றாரோ’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !