உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  தண்ணியில்லாத காட்டுக்கு போவாரா?

 தண்ணியில்லாத காட்டுக்கு போவாரா?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. அமைச்சர்கள், கலெக்டர், 'டீன்' மற்றும் மருத்துவ துறை தலைவர்கள் மட்டுமே மேடையில் அமர வைக்கப்பட வேண்டும். ஆனால், த.வெ.க., மாவட்டச் செயலர் விஜய் வெங்கடேஷ், இணை செயலர் துாயவன் உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் பலரும் மேடையில் அமர வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூத்த அமைச்சர் செங்கோட்டையனும் இதை கண்டுகொள்ளவில்லை. இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'த.வெ.க.,வை சேர்ந்தவங்களுக்கு தான் இதெல்லாம் புதுசு; அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது. இதை கண்காணிக்க வேண்டிய பி.ஆர்.ஓ.,வும் கமுக்கமா இருக்காரே...' என முணுமுணுத்தார். சக நிருபரோ, 'ஆளுங்கட்சியினரை மேடையில் இருந்து எழுப்பி விட்டுட்டு, பி.ஆர்.ஓ.,வை தண்ணியில்லாத காட்டுக்கு போக சொல்றியா...?' என கேட்க, அங்கு சிரிப்பலை எழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூன் 22, 2026 19:20

பட்டமளிப்பு. விழாவுக்கென. உள்ள. Protocol மீறி. காட்சிக்கூட்டமாக்கி. விட்டார்கள் Limelight இல். வரவேண்டுமென்ற. பறக்காவெட்டித். தனம் தான். தெரிகிறது


JeevaKiran
ஜூன் 22, 2026 15:56

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை பிடிப்பான் என்று சும்மாவா சொன்னார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை