| ADDED : டிச 14, 2024 10:28 PM
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தே.மு.தி.க.,வில் மாநில பொறுப்பில் இருந்தவர். அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்து, தற்போது மேயராகியுள்ளார்.இந்நிலையில், சொத்து வரி உயர்வை கண்டித்து, மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த தே.மு.தி.க., ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் வேலம்பாளையம் நகர செயலர் ஆனந்தன், மேயர் தினேஷ்குமாரை ஒருமையில் திட்டி தீர்த்தார்.அவர் பேசுகையில், 'விஜயகாந்தால் வளர்ந்த நீ, அவரை ஏமாற்றி நல்லா இருக்க முடியாது. துரோகத்தின் பிறப்பிடம் நீ தான். இப்ப இருக்கிற எல்லா சொகுசும் இல்லாமல் போய் ரோட்டுக்கு வந்துருவே... அடுத்த முறை நீ கவுன்சிலரா கூட வர முடியாது...' என, பொங்கினார்.இதை வேடிக்கை பார்த்த ஒருவர், 'விஜயகாந்துக்கு இப்படி ஒரு விசுவாசியா... சாபம் விடுவதில் முனிவர்களைமிஞ்சிடுவாரோ...?' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.