உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / சொந்த காசில் சூனியம் வைப்பாரா?

சொந்த காசில் சூனியம் வைப்பாரா?

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அருகே, தி.மு.க., இளைஞர் அணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க., செய்தி பிரிவு இணை செயலர் தமிழன் பிரசன்னா பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, ஹிந்தி திணிப்பு, தொகுதி சீரமைப்பு குறித்து அத்துறையை சேர்ந்த மத்திய அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 'மைக்' வேலை செய்யாததால், தமிழன் பிரசன்னா ஐந்து நிமிடம் பேச்சை நிறுத்தி, டென்ஷனாக இருந்தார்.இதை பார்த்த இளம் நிர்வாகி ஒருவர், 'இவர் டென்ஷன் ஆகிறதை பார்த்தா, மின் வெட்டுக்காக, மாநில அரசின் மின் துறை அமைச்சரையும் விமர்சனம் பண்ணிடுவாரோ...' என 'கமென்ட்' அடிக்க, 'அப்படி திட்டுனா, சொந்த காசுல சூனியம் வச்சுக்கிட்ட கதை ஆகிடும்...' என, சக நிர்வாகி கூற, அனைவரும் கமுக்கமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை