| ADDED : அக் 15, 2024 09:16 PM
கோவை மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த சுகாதாரத்துறை அமைச்சர்சுப்பிரமணியன், காலையில் சூலுாரில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, ரயில்வே பீடர் ரோட்டில் இருந்த தள்ளுவண்டி கடையில், கருப்பு கவுனி அரிசி கூழ் குடித்தார்.'எந்த தானிய கூழ் குடித்தால், என்ன மாதிரியான பலன் கிடைக்கும்' என கடைக்காரர், அமைச்சரிடம் விவரித்தார். அதை ஆர்வமாக கேட்டுக்கொண்ட அமைச்சர், 'இதுபோன்ற தானிய வகை, இயற்கை உணவு முறைகளை பின்பற்றினால், மருத்துவமனைக்குயாரும் போக வேண்டி இருக்காது' எனக் கூறி, நடைபயிற்சியை தொடர்ந்தார்.பார்வையாளர் ஒருவர், 'அமைச்சர் மனது வைத்தால்,எல்லா அரசு மருத்துவமனைகளிலும், இயற்கை உணவுகளை இலவசமாகவே வழங்கலாமே...' என முணுமுணுக்க, மற்றொருவர், 'அவங்க கட்சிக்காரங்க, கேன்டீன்களை, 'டெண்டர்' எடுத்திருப்பாங்களே... அவங்க சும்மா விடுவாங்களா...?' என, கேள்வி எழுப்பியவாறு நடந்தார்.