உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பெருமை அடிச்சுக்கிறாரே!

பெருமை அடிச்சுக்கிறாரே!

சென்னை, ஆவடி பேருந்து நிலையத்தை, 36 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணியை, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.பின், நிருபர்களிடம் அமைச்சர் நாசர் கூறுகையில், '2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஆவடியில், 'டைடல் பார்க்' கொண்டு வருவோம்; கிடப்பில் கிடக்கும் பட்டாபிராம் மேம்பாலத்தை திறப்போம்; ஆவடி அரசு மருத்துவமனையை புதுப்பிப்போம் என கூறினோம். சொன்னது போல அனைத்தையும் செய்து விட்டோம்...' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'இவர் சொல்றது எல்லாமே, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்தவை... அதை இவங்க ஆட்சியில் முடிச்சுட்டு, பெருமை வேற அடிச்சுக்கிறாரே...' என, 'கமென்ட்' அடித்தார்.சக நிருபர், 'ஓ... அதனால தான், இது, 'ஸ்டிக்கர்' ஆட்சின்னு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அடிக்கடி விமர்சனம் பண்றாரா...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 21, 2025 16:53

‘இடித்தவள் இருக்க, புடைத்தவள் இருக்க, எட்டிப்பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாளாம் ‘ என்பார்கள் கிராமப்புறங்களில் அவர்கள் ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்துவிட்டு இவர்கள் பீற்றிக்கொள்வதுதானே மாடல் அரசின் தலையாய கொள்கை


முக்கிய வீடியோ