உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / வந்தால் தானே சொல்ல முடியும்!

வந்தால் தானே சொல்ல முடியும்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகி காளியம்மாள், துாத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, அதிசயபுரத்தில் நடந்த பரதவர் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். பின், அவர் கூறுகையில், 'தமிழகத்தில் உள்ள மீனவர்களை ஒருங்கிணைப்பதற்கான முதல் கூட்டம் இன்று நடந்துள்ளது. தனியாக கட்சி ஆரம்பிக்கும் சூழலோ, எண்ணமோ என்னிடம் தற்போது வரை இல்லை. 'எந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவேன் என்பதை காலம்தான் தீர்மானிக்கும். பல்வேறு கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்தாலும், என் மக்களுக்கும், சமூகத்திற்கும் என்ன தேவை என்பதை பார்த்து தான் முடிவு எடுப்பேன்...' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'எந்தெந்த கட்சிகளில் இருந்து அழைப்பு வருதுன்னு சொல்லலையே...' என, முணுமுணுக்க, சக நிருபரோ, 'வந்தால் தானே சொல்ல முடியும்...' என, சிரித்தபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
அக் 07, 2025 18:39

தன் கட்சியில் உள்ளவர் சற்று மக்களை ஈர்க்கும் வகையில் பேசி, கூட்டம் சேர்ந்து விட்டால் தனது முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற மனப்பதற்றம்தான் இவரை விலக்க வைத்தது. இவரை ஏற்றுக்கொள்ளும் பெரிய கட்சிகள் யாவருக்குமே இந்த மன நிலையிருக்கும்.ஜெ காலத்தில்,கூட்டத்தினர் வைகோவை பேச விடுங்கள் என்றபோது ஜெ கூட்டத்தினரையே ஆவேசமாக கத்திய சம்பவம் கூட நடந்திருக்கிறது.


Krishnamurthy Venkatesan
அக் 07, 2025 14:24

அவரின் ஆவேசமான அர்த்தமுள்ள பேச்சுக்களுக்கு நான் அடிமை.