உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  இப்ப திட்டக்கூட முடியாது!

 இப்ப திட்டக்கூட முடியாது!

ஜவுளி மற்றும் ஆடை தொழிலுக்கான படிப்புகளை கற்று தரும், திருப்பூர், முதலிபாளையம், 'நிப்ட் - டி' கல்லுாரியில் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. 'கிராஸிம்' நிறுவன பிர்லா செல்லுலோஸ், சந்தைப் படுத்துதல் மற்றும் வர்த்தக மேம்பாட்டு குழு தலைவர் முருகன் தென்கொண்டார், மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். பின், அவர் பேசுகையில், 'நான், மூன்றாம் வகுப்பு படித்தபோது, தேர்வில் தோற்று விட்டேன். வாத்தியார் என் காதை பிடித்து திருகியதில், காதில் ரத்தம் வந்து விட்டது. பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, தையல் போட்டனர். 'வீட்டுக்கு வந்த வாத்தியார், 'உங்க பையன் சரியா படிக்கல; காதை லேசா தான் திருகினேன்...' என்றார். அதற்கு என் அப்பாவோ, 'அவன் படிக்கலன்னா காது எதுக்கு; பிய்த்து எடுத்துடுங்க...' என்றார். 'அந்த சம்பவம் தான், என்னை நன்றாக படிக்கத் துாண்டியது. அப்போது முதல், கல்லுாரி முடிக்கும் வரை, முதல் மதிப்பெண் தான் எடுத்தேன்' என்றார். முன்வரிசையில் அமர்ந்திருந்த பேராசிரியர் ஒருவர், 'இப்பல்லாம் மாணவர்களை திட்டக்கூட முடியாது...' என முணுமுணுக்க, சக பேராசிரியர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை