உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  காடுவெட்டியாரை மறந்துட்டாங்க!

 காடுவெட்டியாரை மறந்துட்டாங்க!

மறைந்த, வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான, 'காடுவெட்டி' குருவின் பிறந்த நாள் விழா, சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி சந்தைபேட்டையில், சமீபத்தில் நடந்தது. பா.ஜ., சார்பில், 'காடுவெட்டியார் மாவீரன் ஜெ.குரு' என, பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உள்ளுர் அ.தி.மு.க.,வினர், குரு படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். ஆனால், வன்னியர் சங்கம் மற்றும், பா.ம.க., நிர்வாகிகள் யாரும் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதை வேடிக்கை பார்த்த ஒருவர், 'இலை இருக்கு; தாமரை இருக்கு; மாம்பழத்தை மட்டும் காணோமே...' என, 'கமென்ட்' அடித்தார். அவர் அருகில் இருந்தவர், 'கட்சிக்குள்ள அப்பா, மகனுக்கு இடையில நடக்கிற சண்டையில, காடுவெட்டியாரை மறந்துட்டாங்க போல...' எனக் கூற, அங்கு பலத்த சிரிப்பலை எழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankaranarayanan
பிப் 09, 2026 22:37

காடு வெட்டியாரை இந்த அப்பனும் புள்ளையாண்டானும் சேர்ந்து இருவருமே அரசியலிலிருந்தும் மக்களின் மனத்திலிருந்து வெட்டிவிட்டார்கள் இனி அவர் காட்டில் வெட்டுப்பட்டவராகத்தான் திரிய வேண்டும் ஆனால் மக்களின்மனதில் எப்போதுமே உள்ளார்


D.Ambujavalli
பிப் 09, 2026 06:42

இருங்கப்பா எங்கள் வீட்டு மஹா யுத்தம் முடியாமல் காடு வெட்டி என்ன வேறு எதையும் வெட்டி முடிக்க மாட்டோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை