மேலும் செய்திகள்
தி.மு.க., ஆலோசனை கூட்டத்தின் போது மின்தடை
23-Oct-2026
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழா வரும் 30ம் தேதி நடக்கவுள்ளது. தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் இதில் பங்கேற்க உள்ளார். அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சமீபத்தில் கமுதியில் நடந்தது. பின், பேட்டி அளித்த ராமநாதபுரம் தி.மு.க., – எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா, ‘முத்துராமலிங்க தேவரின் 120வது ஜெயந்தி விழா, 65வது குரு பூஜை விழா நடைபெற உள்ளது. விழாவிற்கு வரும் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், ‘தேவரின் 119வது ஜெயந்தி விழா, 64வது குரு பூஜை விழா தான் இந்தாண்டு நடைபெற உள்ளது. எம்.எல்.ஏ., தவறாக சொல்கிறாரே’ என்றார். மற்றொரு நிருபர், ‘நல்லவேளையா தேதியை சரியா சொன்னாரே’ என, ‘கமென்ட்’ அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.
23-Oct-2026