உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / தோல்வியை கணிச்சிட்டாரே!

தோல்வியை கணிச்சிட்டாரே!

இந்திய கம்யூ., கட்சியின் திருப்பூர் எம்.பி.,யான சுப்பராயன், சமீபத்தில் தாராபுரத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'அரசியல் நெறியுடன் செயல்படும் இடதுசாரிகள், பா.ஜ., சதியை முறியடித்து, கவர்னர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக மட்டுமே, த.வெ.க., ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தோம். தாராபுரம் இடைத்தேர்தல் இயல்பாக நடைபெற வேண்டியது அல்ல; திணிக்கப்பட்ட தேர்தலாக அமைந்துள்ளது. 'ஊழலை ஒழிப்போம்' என கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க., தன் தேவைக்காக இடைத்தேர்தலை கொண்டு வந்துள்ளது. 'மன தைரியம், கொள்கை பலத்துடன் இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளோம். பணம், ஜாதி உள்ளிட்ட பலத்தை பயன்படுத்தி, தேர்தலில் எங்களை தோற்கடிக்கலாம். ஆனால், மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவதில் நாங்கள் தோற்றதில்லை' என்றார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'தேர்தல்ல தோல்வி உறுதி என்பதை இப்பவே கணிச்சிட்டாரே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
அக் 04, 2026 16:43

2. சீட். வென்ற. காங்கிரசுக்கும், விசிக வுக்கும். அமைச்சர், எங்களுக்கு ஒன்றுமில்லை. என்றால். ஏதோ எங்களால். ஆனது. கொஞ்சம். ஓட்டுகளையாவது. பிரிப்போம். என்று தான். போட்டியிடுகிறோம். என்று. வெளிப்படையாகவா. சொல்ல. முடியும்?


Raghavan
அக் 04, 2026 13:24

DMK கூட்டணியில் இருந்து உங்கள் தலைவர் வாங்கிய ரூபா 25 கோடி வெட்ட வெளிச்சம் ஆனது இருந்தே உங்களுக்கு தோல்விதான். ஏதோ ஒரு MP இரண்டு MLA சீட்டை வாங்கிக்கொண்டு பொழப்பை நடத்திக்கொண்டு போங்கள். இடைத்தேர்தலில் நீங்கள் நின்றால் ஜெபிப்பது என்பது பகல் கனவு.