வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த ‘ சௌகிதார் ‘ பேச்செல்லாம் தேர்தலில் வென்று, பதவிக்கு வந்தபின் அப்படியே மாறிவிடும்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி, வேம்பி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக, தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா பங்கேற்றார்.அவர் பேசும்போது, 'தொகுதியில் உள்ள 33 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கவும், கிராம சாலைகள், ஆரம்ப சுகாதார நிலைய மேம்பாடு திட்டங்களை கொண்டு வரவும், முதல்வரிடம் ஒப்புதல் பெற்றுள்ளேன்.'எம்.எல்.ஏ., என்ற அடிப்படையில் முக்கிய பிரச்னைகள் பற்றி முதல்வரிடம் மனுக்கள் அளித்து, பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். பொது பிரச்னைகள் குறித்து, 'வாட்ஸாப்'பில் தெரிவித்தால் கூட நடவடிக்கை எடுத்து வருகிறேன். என் தொகுதி மக்கள் தான் எனக்கு எஜமானர்கள்; நான், அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் சேவகன். என்னை சிறந்த முறையில் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்...' என்றார்.இதை கேட்ட ஒருவர், 'வர்ற தேர்தலிலும் என்னை நீங்க ஆதரிக்கணும்னு, மறைமுகமா இப்பவே பிரசாரத்தை ஆரம்பிச்சுட்டாரே...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
இந்த ‘ சௌகிதார் ‘ பேச்செல்லாம் தேர்தலில் வென்று, பதவிக்கு வந்தபின் அப்படியே மாறிவிடும்