உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  அழகா மிக்ஸ் பண்ணிட்டாரே!

 அழகா மிக்ஸ் பண்ணிட்டாரே!

மதுரை, காளவாசல் பகுதியில், சாலை அமைக்கும்பணிக்கு நடந்த பூமி பூஜையில், மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான செல்லுார் ராஜு பங்கேற்றார். அவரிடம், 'தமிழகத்தில் போதை கலாசாரம் தொடர்கிறதே' என நிருபர்கள் கேட்டதற்கு, 'போதையால், சிறுமி முதல் பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். ஒரு படத்தில், ஆர்.ஜே.பாலாஜி சொல்வாரு,.. 'உடம்பு பூரா வியாதின்னு' என்றவர், திடீரென பேச்சை நிறுத்தி, 'ஓ, அவரு தாடி பாலாஜியா' என்றபடியே தொடர்ந்தார்... 'தாடி பாலாஜியிடம் விவேக், எல்லாத்துக்கும் ஒரே மருந்து இருக்கு. அதை குடிச்சா உன் பிரச்னை தீர்ந்திடும்'னு சொல்வாரு. அதுபோல், தி.மு.க., ஆட்சியில இருக்கிற எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு, ஆட்சி மாற்றம்தான்' என்றார். இதை கேட்ட அக்கட்சி தொண்டர் ஒருவர், 'காமெடி காட்சியை, நடப்பு அரசியலோடு அண்ணன் அழகா மிக்ஸ் பண்ணிட்டாரே... கில்லாடி தான்பா...' எனக் கூற, சக தொண்டர்கள் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 21, 2026 06:28

இவர்கள் ஆண்டபோதும், ஆட்சிக்கு வந்தாலும் மட்டும் அப்படியே ராம ராஜ்ஜியம் வந்துவிடுமாக்கும் இவர்கள் தலைவரே, அரசை எதிர்த்து பேசுவதானால் அடக்கி வாசிக்கிறார், அவரது பலவீனங்கள் அங்கு மாட்டியிருப்பதால் இவர்தான் சர்வ ரோமா நிவாரணியாக அதிமுக ஆட்சியை prescribe செய்கிறார்


முக்கிய வீடியோ