உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  சடங்கு மாதிரி ஆக்கிட்டாங்களே!

 சடங்கு மாதிரி ஆக்கிட்டாங்களே!

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில், விவசாயிகள் பலரும் தங்களது குறைகள், கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆனால், அதை கவனிக்காமல், வேளாண் துணை அலுவலர் சுரேஷ்குமார், வேளாண் அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர், சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். இதை கவனித்த கலெக்டர், 'விவசாயிகள் பேசுவதை கேட்பதா, நீங்கள் பேசுவதை கவனிப்பதா?' என கேட்டார். அத்துடன், 'நீங்கள் எந்த துறை?' என கேட்க, 'வேளாண் துறை மேடம்' என, இருவரும் பதில் அளித்தனர். 'உங்கள் துறை சம்பந்தப்பட்ட கூட்டத்தில், உங்களுக்கே அக்கறை இல்லேன்னா எப்படி...' என, கலெக்டர் கடிந்து கொண்டார். இதை கேட்ட விவசாயி ஒருவர், 'விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை, வேளாண் அதிகாரிகள் வெறும் சடங்கு மாதிரி ஆக்கிட்டாங்களே...' என முணுமுணுக்க, சக விவசாயிகள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sivaprakasam Chinnayan
ஜன 05, 2026 18:13

உப்பு போட்டு சாப்பிட்றாங்களா இல்லையா தெரியல எதற்காக கைநீட்டி சம்பளம் வாங்குகிறார்களோ அதற்கு கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும்


D.Ambujavalli
ஜன 03, 2026 06:22

குறைகளைக் கேட்டு, அப்படியே நிவாரணம் செய்துவிடப்போகிறார்களா? இந்தக் கூட்டமெல்லாம், சும்மா எண்ணிக்கையைக் காட்ட மட்டும்தான் என்பது தெரிந்துதான் அவர்கள் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை