உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  நம்மை வெளியே தள்ளிட்டாங்களே!

 நம்மை வெளியே தள்ளிட்டாங்களே!

சென்னை, திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், தனியார் மண்டபத்தில் சமீபத்தில் நடந்தது. இதில், சென்னை மண்டல தி.மு.க., பொறுப்பாளரான ராஜா எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் துவங்கும் முன், ஊடகத்தினரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டு வெளியேறுமாறு, தி.மு.க., நிர்வாகிகள் கூறினர். இதன்படி, சிறிது நேரத்தில் அனைவரையும் வெளியேற்றி, மண்டபத்தின் கதவுகளை அடைத்தனர். வெளியில் வந்த இளம் நிருபர் ஒருவர், 'தங்களது தேர்தல் யுக்திகள் மற்ற கட்சிகளுக்கு தெரியக் கூடா துன்னு, நம்மை அனுமதிக்கவில்லையா' என கேட்டார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அட, அதெல்லாம் இல்லப்பா... கட்சியில் நிறைய கோஷ்டிகள் இருக்கு... அது பத்தி காரசாரமா பேசிக்கிடுவாங்க... அதை நாம செய்தியாக்கிடக் கூடாதுன்னு தான் நம்மை வெளியே தள்ளிட்டாங்க...' எனக் கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே நடையை கட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 26, 2026 06:39

கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு பங்கு பிரிப்பதில் ஏற்றத்தாழ்வு, டெண்டர் ஒதுக்குவது, அரசு நிதியில் ‘ஒதுக்குவது’ என்று எத்தனை பிரசனைகளை ‘விவாதிக்க வேண்டும். சமயத்தில் அடிதடி, furniture உடைப்பு நாடகம், கூட நடக்கும். இதெல்லாம் வெளியில் வரலாமா?


சமீபத்திய செய்தி