உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ‘தங்களது நலன் தான் முக்கியம்!’

‘தங்களது நலன் தான் முக்கியம்!’

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்.பி., ரவிகுமார், சமீபத்தில் திண்டிவனத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘பார்லிமென்டில் ஏற்கனவே தோற்றுப்போன தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தை, மீண்டும் கொண்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது. ‘மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தி.மு.க., தற்போது தேர்தலில் அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவை கருதியும், கூட்டணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருதியும் தவறான முடிவை எடுத்தால், தமிழகத்துக்கும், தென் மாநிலங்களுக்கும், பார்லிமென்ட் ஜனநாயகத்துக்கும் பெரும் இழப்பு ஏற்படும். அதனால், அத்தகைய முடிவை தி.மு.க., எடுக்கக்கூடாது’ என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘தி.மு.க.,வினர் முதல்ல தங்களது நலனை மட்டும் தான் பார்ப்பாங்க... அப்புறம் தான் நாடு, மக்கள் எல்லாம்’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
அக் 27, 2026 19:04

தனக்கு மிஞ்சி தான் தர்மம் என்பது தான் அரசியல் கட்சிகளின் பாலீசி.


D.Ambujavalli
அக் 27, 2026 18:59

'ஒண்ணான தெய்வம். ஒடுங்கிக் . கிடக்கிறதாம் . சுற்றுப்பட்டு தெய்வம். சோற்றுப்பட்டைக்கு. நிற்கிறதாம்'. என்பார்கள் திமுக. இருக்கிற. இருப்பில். மற்ற. குட்டி. . கட்சிகள். கவலையை கையில். எடுப்பார்களா?


கண்ணன்
அக் 27, 2026 11:09

ஐயா, நீங்கள் நடப்பினைப் புரிந்து கொள்ளவாவது முயலுங்கள்