| ADDED : அக் 06, 2024 11:33 PM
திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப்பெரும்புதுார் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லுாரியில் நடந்த, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, வீரர் - வீராங்கனையருக்கு பரிசு வழங்கும் விழாவில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில், 'எந்த ஒரு போட்டி யாக இருந்தாலும், வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையுடன், அது குறித்த பொறாமையுடனும் செயல்பட வேண்டும். அப்போது தான் அந்த போட்டியில் நாம் வெற்றி பெற முடியும்' என்றார்.இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அப்ப இவர் பதவியை பறித்ததில் இருந்து எல்லா அமைச்சர்கள் மேலயும் பொறாமையுடனும், வேட்கையுடனும் இருந்திருக்கார் போல...' என, முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'எப்படியோ மீண்டும் பதவியை வாங்கி சாதிச்சு காட்டிட்டாரே...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தவாறு நடந்தார்.