உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: அக்., 10 முதல் நவ., 14ம் தேதிக்கு இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் மட்டும், நாடு முழுதும் தேசிய ஊரக வேலை திட்ட பயனாளிகள், 27 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, வேலை நாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, கடைசியாக 100 நாள் வேலை திட்டத்தையே ஒழித்து, கிராமப்புற ஏழைகளை பட்டினி போட்டு கொல்வது என்பது தான் மத்தி ய பா.ஜ., அரசின் நீண்ட கால செயல்திட்டம். மத்திய அரசு போலி பயனாளிகளை தான் நீக்கியிருக்கு... இவங்க, ஈயை பேனாக்கி, பேனை பெருமாளாக்க பார்க்கிறாங்க! தமிழக மகளிர் காங்., தலைவர் ஹசீனா சையத் பேச்சு: வரும் சட்டசபை தேர்தலில் மகளிர் காங்கிரசுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். தற்போது, லோக்சபாவில் தமிழக காங்., சார்பில் இரண்டு பெண் எம்.பி.,க்களும், சட்டசபையில் ஒரு பெண் எம்.எல்.ஏ.,வும் உள்ளனர். 'வரும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கி தரப்படும்' என, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 'தமிழக காங்கிரசுக்கு, 11 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும்'னு தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி சொன்னது இவங்க காதுக்கு எட்டலையோ? தி.மு.க., இளைஞரணி செய லரும், துணை முதல்வருமான உதயநிதி பேட்டி: போராட்டத்தின் வாயிலாக வளர்ந்த கட்சி நம் கட்சி. தமிழகத்தில் அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஆனால், டில்லியில் தி.மு.க., தான் பிரதான எதிர்க்கட்சி. 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக முதல்வர் பதவியில் ஸ்டாலின் அமர்வார். பீஹார்ல நிதிஷ் குமார், 10வது முறையா முதல்வராகிறார்... இவர், 2வது முறைக்கே பெருமை அடிச்சுக்கிறாரே! அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: தமிழகம் முழுதும், தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட் டியல் சிறப்பு திருத்தப் பணி நடக்கிறது. இதை எதிர்த்து, தி.மு.க., நீதிமன்றம் சென்றும் பலனில்லை. இதனால், தி.மு.க., எப்படியாவது தங்க ளது போலியான வாக்கா ளர்களை காக்க, பல்வேறு குறுக்கு வழிகளை கையாள்கிறது. அதி ல் ஒன்றாக, 'நாங் கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறோம். அதனால், எங்களுக்கு சாதகமாக செயல் பட வேண்டும்' என, வாக் காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு மிரட்டல் விடுக்கிறது. அது சரி... தங்களது நாலரை வருஷ சாதனைகள் மீது நம்பிக்கை இல்லாமல் தான், போலி வாக்காளர்களை காப்பாற்ற தி.மு.க.,வினர் போராடுறாங்களோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை