உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: 'சொந்த நலனுக்காக அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்தி விட்டார் பழனிசாமி' என்று தினகரன் தொடர்ந்து கூறி வருகிறார். அவர் விரக்தியிலும், இயலாமையிலும் பேசுவது தெரிகிறது. அ.தி.மு.க., ஆட்சி அமைய நீங்கள் துாணாக இல்லை என்றாலும், துயரமாக இருக்கக் கூடாது. அ.தி.மு.க.,வால் நீங்கள் பெற்ற வாழ்வுக்கும், முகவரிக்கும், 'அ.தி.மு.க., எங்கிருந்தாலும் வாழ்க' என்ற பெருந்தன்மையோடு கருத்து தெரிவிக்க வேண்டும்.தினகரனை விட்டுட்டு நீங்க மட்டும், 'வாழ்ந்துட்டே' இருந்தால், அவர் காதுல புகை வர்றது சகஜம் தானே! துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேட்டி: மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மட்டுமே லோக்சபா தொகுதி சீரமைப்பை செய்தால், தமிழகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில், மக்களிடம் நியாயமான அச்சம் உள்ளது. மத்திய அரசு இதை தெளிவுபடுத்த வேண்டும். இப்ப, உங்க கூட்டணிக்கு 39 எம்.பி.,க்கள் இருந்தும் உருப்படியா எந்த வேலையும் நடக்கலையே... அதனால, லோக்சபா தொகுதிகள் குறைந்தாலும், கூடுனாலும் தமிழக மக்கள் எந்த கவலையும் பட மாட்டாங்க!வி.சி., கட்சியின் மாநில அமைப்பு செயலர் கோவேந்தன்பேட்டி: எங்கள் கட்சியின்கிருஷ்ணகிரி மத்திய மாவட்டச்செயலர் மாதேஷ், கட்சியின் கொள்கைகளை புரிந்து பேசவேண்டும். அ.தி.மு.க.,துணை பொதுச்செயலர் முனுசாமி, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலர் அசோக்குமாரை மரியாதை குறைவாக, மாதேஷ் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. இன்று, தி.மு.க., கூட்டணியில் வி.சி., இருக்கிறது; நாளை, அ.தி.மு.க., கூட்டணிக்கு செல்ல நேரிடலாம். மாதேஷ் பேசிய கருத்துகளுக்கு, நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். அது சரி... 'நாளைக்கு கூட்டணி சேரும் வாய்ப்பை இன்னைக்கே வாயை விட்டு கெடுத்துடாதீங்க'ன்னு சொல்றாரோ?தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேச்சு: மத்திய அரசு மும்மொழி கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. 'மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி வழங்குவோம்' என்று கூறி, நம் பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய 2,152 கோடி ரூபாய் நிதியை வழங்க மறுக்கிறது. மாணவர்கள், நம்தாய்மொழியை பாதுகாக்கும் அடுத்தக்கட்ட போரில் பங்கெடுத்து, நம் மொழியை பாதுகாக்க வேண்டும்.அமைச்சர் பதவியில் இருந்துட்டே போராடினால் சரியா வருமா...? முதல்ல அதை ராஜினாமா பண்ணிட்டு, இவர் போராட்டக் களத்தில் இறங்கலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
மார் 07, 2025 12:04

அமைச்சர் பொய்ய நாதன், மன்னிக்கவும், மெய்யநதனின் படிப்பு எப்படி? இவர் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை நன்றாகப் புரித்து கொட்டுதான் பேசுகிறாரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை