உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., மருத்துவர் அணி இணைச்செயலர்டாக்டர் சரவணன் அறிக்கை: சுகாதாரம் மற்றும் மக்கள் நலனில் தேசிய சராசரியே,77 சதவீதம் தான். இதில், தமிழகம் 77 சதவீதம் மதிப்பெண் பெற்றதாக பெருமையாக கூறுகிறது. ஆனால், குஜராத் 90 சதவீதம், மஹாராஷ்டிரா 84, உத்தரகண்ட் 84, ஹிமாச்சல பிரதேசம் 83, கர்நாடகா 80, கேரளா 80, கோவா 79, பஞ்சாப் 79, திரிபுரா 79, மேற்கு வங்கம் 79, ஆந்திரா 78, ஜார்க்கண்ட் மற்றும் தமிழகம் 77 சதவீதம். இதில், தமிழகம், 12வது இடத்தில் தான் உள்ளது.மேற்கு வங்கம், திரிபுராவுக்கு பின்னாடி நாம இருப்பது, பெருமைக்குரிய விஷயமா தெரியலையே! தமிழக காங்., பொதுச்செயலர் காண்டீபன் பேச்சு: 'சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவர்' என, தமிழக துணை முதல்வர் உதயநிதியை, ஆந்திரதுணை முதல்வர் பவன் கல்யாண் விமர்சித்து பேசியது, அவரது அரசியல் முதிர்ச்சிஇன்மையை தான் காட்டுகிறது.ஜெகன் மோகன் ரெட்டியை, ஹிந்து விரோதியாக காட்டுவதற்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவசரப்பட்டு எடுத்த லட்டு விவகாரத்தில் தோல்வி தான் மிஞ்சியது. லட்டு வழக்கில் சந்திரபாபு நாயுடுக்கு குட்டு தரும் வகையில் வந்த, உச்ச நீதிமன்ற உத்தரவை திசை திருப்புவதற்காக, பவன் கல்யாண், உதயநிதியைவம்படிக்கு விமர்சித்திருப்பதுகண்டிக்கத்தக்கது.ஆந்திராவுல திசை திருப்ப எந்த விவகாரமும் கிடைக்காம தான், உதயநிதியை வம்புக்கு இழுக்குறாரா என்ன?தி.மு.க., அமைப்புச் செயலர்ஆர்.எஸ்.பாரதி பேச்சு: துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில்நானும் பங்கேற்றேன்.கருணாநிதியின் ஆய்வுக் கூட்டங்களிலும் பலமுறை பங்கேற்று இருக்கிறேன். அப்போது, கருணாநிதி தீர்க்கமான முடிவுகளை, 'டக்டக்'கென எடுப்பதை பார்த்துஇருக்கிறேன். உண்மையைசொல்கிறேன்... உதயநிதி உருவத்தில், கருணாநிதியை பார்த்தேன்; ரசித்தேன்.அடுத்து, இன்பநிதி உருவத்தில்ஸ்டாலினை பார்க்கும் காலமும் வரும்!தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: உலக சாதனை படைத்த சென்னை மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு போதிய அக்கறை காட்டாதது ஏன்? தனியாரின் வருமானத்திற்கும், துணை முதல்வர் உதயநிதியின் விளம்பர மோகத்திற்காகவும் நடத்தப்பட்ட, 'பார்முலா 4' கார் ரேஸ்க்கு காட்டிய முழு அக்கறை, ஏன் இந்நிகழ்ச்சிக்குகாட்டப்படவில்லை?விமானப் படை மத்திய அரசு வசம் இருப்பதால, சத்தமில்லாம ஒதுங்கிட்டாங்களோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
அக் 09, 2024 08:46

காங்கில் படிப்பறிவற்ற கூட்டமதான் உள்ளது என்பதனை மீண்டும் உறுதிசெய்த திரு காண்டீபனுக்கு வாழ்த்துகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை