உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: வரும் 2026ல்,தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்குரியஅஸ்திரத்தை விஜய் ஏற்கனவே தொடுத்துள்ளார்.மிதமிஞ்சிய ஊழல், கனிமவள கொள்ளை, டாஸ்மாக் பாதிப்புகளில் இருந்து தமிழகத்தை விடுவிக்க, 'குறைந்தபட்ச செயல் திட்டத்தில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்ற முழக்கத்துடன் தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இதுதான் மஹாராஷ்டிரா மாநிலத்தின்மகாயுதி கூட்டணி சொல்லும் பாடம்.குட்டி கட்சிகளை கொம்பு சீவி விடுறார்... இவரது எண்ணம் ஈடேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்!

மகாயுதி கூட்டணி சொல்லும் பாடம்.

குட்டி கட்சிகளை கொம்பு சீவி விடுறார்... இவரது எண்ணம் ஈடேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்! த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு: தற்போதுபெய்யும் மழையால் டெங்கு,மலேரியா காய்ச்சலில் இருந்துமாணவர்கள், பொதுமக்களைபாதுகாக்க முன்னேற்பாடாக, நிலவேம்பு கஷாயம் கொடுக்கலாம். மாவட்ட, வட்டார, கிராமஅளவில் மருத்துவ முகாமிற்குஏற்பாடு செய்து, நோய் தடுப்பில்ஈடுபடலாம். அரசு மருத்துவமனைகள், பஸ், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், இது குறித்து சுகாதாரத்துறை விழிப்புணர்வுஏற்படுத்த வேண்டும்.பொறுங்க... உதயநிதி பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சதும், இதை பத்தி யோசிப்பாங்க!தமிழக காங்., துணை தலைவர்ராம சுகந்தன் பேட்டி:'தமிழகத்தின் மானம் அல்ல, இந்தியாவின் மானம் உலகம் முழுதும் கப்பல் ஏறி இருக்கிறது'என, அதானி விவகாரத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணிகருத்து தெரிவித்திருந்தார். 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் சிலமாதங்களுக்கு முன், அதானி யின் தில்லுமுல்லுகளை வெளிப் படுத்திய போது, அன்புமணி ஏன் மவுனமாக இருந்தார்?அன்புமணி தமிழகத்தில் மட்டும் தான் அதானியை எதிர்ப்பார்... டில்லி போயிட்டா, மவுனமாகிடுவார்!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: யாரும், யாருக்கும் கட்டுப்படாத ஜமீன்தார்களின் குத்தகை கூடாரமாக, அ.தி.மு.க., சுருங்கி விட்டது. இது ஜனநாயகத்திற்கு ஒவ்வாது. 'என் மக்கள் செல்வாக்கில் தான் நீங்கள்' என்ற அளவிலான ஒரு சர்வாதிகார தலைமை தான், அ.தி.மு.க.,வை வழிநடத்த முடியும். ஆனால், அது போன்ற தலைமை இனி அ.தி.மு.க.,வுக்கு கிடைப்பது அரிது.வாஸ்தவம் தான்... 'என் செல்வாக்கில் தான் நீங்கள்' என்பது, ஜெ., காலத்துடன் முடிஞ்சு போயிடுச்சு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி