வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டிச..15 ம் தேதி வானகரத்துல நடக்கயிருக்கும் கூட்டத்துக்கு போய் ரகளை பண்ண ஐடியா இருக்கும் போல..
மேலும் செய்திகள்
'கள ஆய்வுக்கு பதிலாக கலவர ஆய்வு செய்கின்றனர்!'
28-Nov-2024
அ.தி.மு.க, ஒருங்கிணைப்புகுழு என்ற பெயரில் தனி அமைப்புநடத்தி வரும் பெங்களூரு புகழேந்தி:
சசிகலா அவ்வப்போது, '2026 சட்டசபை தேர்தலுக்குள் பிரிந்திருக்கும் கட்சியை சேர்த்து வைக்கிறேன்' என, சொல்கிறாரே தவிர, அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பன்னீர்செல்வம் எங்கே இருக்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. அவருடன் இரண்டு ஆண்டு பயணம் செய்து வீணாகி விட்டேன். தொண்டர்களை எல்லாம் முட்டாள்களாக தலைவர்கள் கருதுகின்றனர். எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது.இது, இவ்வளவு நாள் கழிச்சு தான் இவருக்கு தெரிஞ்சுதா? தமிழக காங்., பொதுச் செயலர்ரமேஷ்குமார் அறிக்கை: நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால், முதலில் வெறுப்பு பிரசாரத்தை பா.ஜ., நிறுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளைபழிவாங்க, அமலாக்கத்துறை,வருமான வரித்துறை உள்ளிட்ட அரசு அதிகார மையங்களை தங்களின் ஏவல் துறைகளாக பா.ஜ., பயன்படுத்துகிறது. அந்த வகையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு சந்தேகம்உள்ளது. மீண்டும் ஓட்டுச்சீட்டு வாயிலாக தேர்தல் நடத்தவேண்டும் என்பதே காங்கிரஸ்கட்சியின் நிலைப்பாடு.அப்ப, இவங்க கட்சி ஆட்சியை பிடித்த கர்நாடகா, தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் முடிவிலும்இவருக்கு சந்தேகம் இருக்குதா?தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சி மாநில பொதுச் செயலர்குமரய்யா பேச்சு: 'உலகளவில்ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான போலீஸ் துறையாக தமிழக போலீஸ் துறை விளங்குகிறது' என, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவிக்கிறார். அப்படி புகழ் வாய்ந்த போலீஸ் துறையால், வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரத்தில் குற்றம் இழைத்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாதது ஏன் என்பதை, முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.அந்த மாதிரி சின்ன சம்பவங்களை எல்லாம் நம்ம போலீசார் கண்டுக்க மாட்டாங்க போலும்!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: ஊர், ஊராக போய் கலவர ஆய்வு நடத்துவதற்கு பதிலாக, ஒரே இடத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு கலவர ஆய்வு நடத்திடலாம் என, டிச., 15க்கு நாள் குறிச்சிருக்காரு பழனிசாமி. அது சரி... ஏற்கனவே கலவரம்நடத்திய அனுபவம் உள்ள இடம் தானே வானகரம்.அப்ப, வானகரத்துல நடக்க இருக்கிறது பொதுக்குழு இல்ல... போர்க்குழுன்னு சொல்றாரா?
டிச..15 ம் தேதி வானகரத்துல நடக்கயிருக்கும் கூட்டத்துக்கு போய் ரகளை பண்ண ஐடியா இருக்கும் போல..
28-Nov-2024