அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: வேட்டியை மாற்றிக் கட்டி, தி.மு.க.,-விற்கு மாறிய அமைச்சர் ரகுபதிக்கு, எங்கள் பொதுச்செயலர் பழனிசாமி குறித்து பேச அருகதை கிடையாது. அ.தி.மு.க.,வில் இருந்தபோது தொண்டர்கள்உழைப்பால் எம்.எல்.ஏ.,வான அவர், ஜெயலலிதா கருணையால் அமைச்சரானார்.பதவியும், அதிகாரமும் வேண்டுமென அடிமையாக தி.மு.க.,வில் சேர்ந்து கொண்டார். அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்திபேட்டி: மறைந்த காங்கிரஸ் மூத்ததலைவர் இளங்கோவன், எம்.பி.,-- எம்.எல்.ஏ., மத்திய அமைச்சராக இருந்து மக்கள் சேவை செய்துள்ளார். தமிழகமே இளங்கோவனுக்குபுகழஞ்சலி செலுத்துகிறது. அவரது உடல் தகனம் செய்தநேரத்தில், சிலர் பொதுக்குழுகூட்டம் நடத்தியது வேதனை.அவ்வளவு பண்பாளர்களாக அவர்கள் இருக்கின்றனர். துரோகிகளுக்கு நல்லவர்களைபற்றி தெரியாது அல்லவா?இளங்கோவன் இறப்புக்கு காங்.,மேலிட தலைவர்களே வரலையே...இதுல, அ.தி.மு.க.,வை குறை சொல்லி என்ன புண்ணியம்?தமிழக பா.ஜ., பொதுச்செயலர்ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. எனவே, ஒரேநாடு; ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தேர்தல் செலவினம்குறையும்; ஓட்டு சதவீதம் அதிகரிக்கும். மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதைஎதிர்க்கணும் என்பதை கொள்கையாகவே வைச்சிருப்பாங்களோ?அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: அ.தி.மு.க., பொதுக்குழுவில் பழனிசாமி என்ன வேண்டுமானாலும் பேசுவார். அவருக்கு தெரிந்ததெல்லாம் துரோகம் தான். அவருடன் சேர்ந்த எல்லாருக்கும்,கட்சியினருக்கும் துரோகம் தான் செய்துள்ளார். தி.மு.க., ஆட்சி பொறுப்பில் இருப்பதற்கு பழனிசாமி தான் காரணம்.லோக்சபா தேர்தலில் தி.மு.க.,40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு, பழனிசாமி தனியாக ஆட்களை நிறுத்தியதுதான் காரணம்.பழனிசாமி என்ற ஒற்றை மனிதரை பழிவாங்க, தனிக்கட்சி துவங்கி ஓட்டுகளை பிரித்து, இவருக்கு அடையாளம் கொடுத்த அ.தி.மு.க.,வை வீழ்த்த நினைக்கும்இவரது செயலுக்கு பெயர் என்ன?